பொய் வழக்குப் போடும் காவல்துறையை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்
மக்கள் தேசம் கட்சி தலைவர் மீது பொய் வழக்குப் போடும் திருநெல்வேலி காவல்துறையை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்.
மக்கள் தேசம் கட்சி தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ஆசைத்தம்பி மீது பொய் வழக்கு போட்டு முயற்சி செய்யும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மக்கள் தேச கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே மக்கள் தேசம் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட இணைச்செயலாளர் சிலம்பரசன் தலைமையில் சார்பில் 100க்கும் மேற்பட்ட கட்சியினர் காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநில பொது செயலாளர் தவேதமணி, பறையர் மாநில செயலாளர் அரசு, மாநில மாணவரணி செயலாளர் பிரசாந்த், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் கருணாநிதி ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments