Breaking News

அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்கையை அதிகப்படுத்த பேரணியில் துணை மேயர் பங்கேற்பு

காஞ்சிபுரம் திருக்காலிமேடு அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்கையை அதிகப்படுத்த பேரணியில் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பங்கேற்றார்.

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்திட விழிப்புணர்வு ஏற்படுத்திட தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் 2022-2023ம் கல்வியாண்டிற்க்கான மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட கல்வித்துறையானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



அந்த வகையில் காஞ்சிபுரம் திருகாலிமேடு பகுதியிலுள்ள அரசு ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களுடனும் அதேபோல் உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடனும் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியானது இன்று நடைபெற்றது.

இதில் அப்பகுதியின் மாமன்ற உறுப்பினரும், மாநககராட்சி துணை மேயருமான குமரகுருநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதில் மாணவர்கள் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிந்திடுக எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியும், ஆசிரியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கியும் திருகாலிமேடுக்கு உட்பட்ட பகுதிகளில் பேரணியாக சென்று அரசு பள்ளி மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.மேலும் தொடக்க பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவ,மாணவிகளுக்கு பாட புத்தகங்களையும் வழங்கப்பட்டன.

No comments

Thank you for your comments