கலைஞரின் 99ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கீழம்பி ஊராட்சியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 99ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மூன்று சக்கர மிதிவண்டி, தையல் இயந்திரம், மின்விசிறி, சலவை பெட்டி, மூக்கு கண்ணாடி உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை வழங்கி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், தலைமை கழக பேச்சாளர்கள் திரு.கரூர் முரளி,திரு.நாத்திகம் நாகராசன்,ஆகியோர் சிசிறப்புரையாற்றிய கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி.நித்யா சுகுமார் அவர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதி திரு.எம்.எஸ்.சுகுமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் திருமதி.மலர்கொடி குமார்,வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.பி.எம்.குமார்,ஒன்றிய குழு துணை தலைவர் திருமதி.திவ்யபிரியா இளமது,கீழம்பி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.மகாலட்சுமி ராஜசேகர்,துணை தலைவர் திருமதி.திவ்யா ஹென்ரி,திரு.கீழம்பி ராஜசேகர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்,பல்வேறு அணிகளை சேர்ந்த கழகத்தினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments