இருளர் இன பழங்குடியின மக்களுக்கு ரூ.8.22 கோடி மதிப்பீட்டில் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலையாங்குளம் ஊராட்சியில் 178 இருளர் இன பழங்குடியின மக்களுக்கு ரூ.8.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள குடியிருப்புகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்து, வீடு கட்டுவதற்கான ஆணைகளை இருளர் இன பழங்குடியின மக்களுக்கு வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையாங்குளம் ஊராட்சியில் 178 இருளர் இன மக்களுக்கு ரூ.8.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள குடியிருப்புகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்து, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு பேரிடர் காலங்களில் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க ஊராட்சி ஒன்றியம் தோறும் புதிய குடியிருப்புகள் கட்ட தீர்மானிக்கப்பட்டு 443 வீடுகள் கட்டும் பணியினை மாண்புமிகு குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் 01.06.2022 அன்று துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையாங்குளம் ஊராட்சியில் சுமார் ரூ.45,56,500/- மதிப்பிலான நிலம் ஒதுக்கப்பட்டு, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோட்டநாவல், சடச்சிவாக்கம், ரெட்டமங்கலம், நெல்வேலி, எலப்பாக்கம், நெய்யாடுபாக்கம், மலையாங்குளம், சிறுபினாயூர், தண்டரை, எடையும்புதூர், கிடங்கரை, கிளக்காடி, திருமுக்கூடல், பினாயூர், கட்டியாம்பந்தல் மற்றும் நாஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் 178 இருளர் இன மக்களுக்கு வீடு கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஸ்ரீதேவி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ராஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments