அரசு இசைப் பள்ளியில் மாதம் ரூ.400/- கல்வி உதவித் தொகையடன் மாணவர் சேர்க்கை
காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாதம் ரூ.400/- கல்வி உதவித் தொகையடன் மாணவர் சேர்க்கை என்று மாவட்ட ஆட்சியர் இன்று (22/06/2022) தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறிந்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியானது கோட்டைக்காவல் கிராமம், (செவித்திறன் குறை உடையோருக்கான அரசு உயர் நிலைப்பள்ளி அருகில்) சதாவரம், ஓரிக்கை அஞ்சல் என்கிற முகவரியில் இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரியக் சுலைகளான
1. குரலிசை
2.நாதசுரம்
3.தவில்
4.தேவாரம்
5.பரதநாட்டியம்
6. வயலின்
7. மிருதங்கம்
ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
12 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்/பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சேரக்கை கட்டணமாக முதலாம் ஆண்டிற்கு ரூ.350ம், இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கட்டணமாக ரூ.325/- மட்டும் செலுத்தப்பட வேண்டும்.
மாணவ மாணவியருக்கு இலவச பேருந்து பயணச்சலுகை, 16-17 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி மற்றும் மாதந்தோறும் ரூ.400/-அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும் நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.திருமதி மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இப்பள்ளியில் சேர்ந்து பயில விண்ணப்பிக்க வேண்டுவோர்...
நா.இரமணி, தலைமை ஆசிரியை,
மாவட்ட அரசு இசைப்பள்ளி,
சதாவரம், ஓரிக்கை அஞ்சல்,
காஞ்சிபுரம் 631502
எனும் முகவரியில் நேரில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரம் வேண்டுவோர் இசைப்பள்ளி அலுவலகத்தை 044-27268190, 9442572948, என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு சேரலாம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments