Breaking News

கடைசி தேதி : 10-06-2022 - சிறந்த விளையாட்டு வீரர்கள்/ உடற்கல்வி இயக்குநர்/ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் முதலமைச்சர் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிறந்த விளையாட்டு வீரர்கள்/ உடற்கல்வி இயக்குநர்/ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் போட்டிகளை நடத்தியவர்கள், நன்கொடையாளர்கள் , முதலமைச்சர் மாநில விருதுக்கு  விண்ணப்பிக்கலாம் என ஆட்சித்தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும் தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள், 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர்கள் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1.00இலட்சம் வீதம் ரூ.10,000/- மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கி ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கி வருகிறது.



இது குறித்த செய்தியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களைச் சமர்பித்தல் வேண்டும்.  இது தவிர விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர்கள் /நிர்வாகிகள்/ஆதரவளிக்கும் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் (ரூ.10.00இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) / ஆட்ட நடுவர்கள் ஆகியோர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கப்படுகிறது.  இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு  ரூ.10,000/-க்கு மிகாமல் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.  இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 



இத்திட்டத்தின்படி, 2021  - 2022 ஆம் ஆண்டிற்கான (காலம் 01.04.2018 முதல் 31.03.2021 வரை) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர்/ உடற்கல்வி ஆசிரியர் / விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர்கள்/நிர்வாகிகள்/ஆதரவளிக்கும் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள்/ ஆட்ட நடுவர்கள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர். இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை மற்றும் இதர துறைகளில் பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். இரண்டாவது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது.  ஒருவர் காலமாகும் பட்சத்திலும், இவ்விருது வழங்கப்படும் விருதிற்கு முந்தைய 3 ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை இவ்விருதிற்காக கருத்தில் கொள்ளப்படும். விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பத்துடன் இணைத்தல் வேண்டும். உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பித்தல் வேண்டும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு கழகம் / மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் /  முதன்மைக் கல்வி அலுவலர் / முதன்மை உடற்கல்வி ஆய்வர் (ஆடவர் / மகளிர்)  மூலமாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர்கள் / நிர்வாகிகள் / ஆதரவளிக்கும் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்கள்) / ஆட்ட நடுவர்கள் ஆகியோர்கள் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் முதன்மை செயலர் / உறுப்பினர் செயலர் அவர்களுக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை (உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை – 600 003) என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டிய கடைசி நாள்-10.06.2022 ஆகும்.  மேலும் விவரங்களுக்கு கைப்பேசி 7401703481 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

எனவே காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி, இ. ஆ. ப.   அவர்கள் தெரிவிக்கின்றார்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments