வரதராஜபெருமாள் திருத்தேர் உற்சவம் - சூர தேங்காய் உடைத்து வடம் பிடித்து துவக்கி வைத்தர் எம்எல்ஏ எழிலரசன்
காஞ்சிபுரம்:
வரதராஜபெருமாள் கோவில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் 7- நாள் திருத்தேர் உற்சவம் வெகுவிமரிசையாக துவங்கியது.
சுமார் 73 அடி உயரமுள்ள 7 நிலைகொண்ட சிற்பங்கள் வேலைப்பாடுகள் கொண்ட தேர் உற்சவம் காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி. வி. எம் .பி. எழிலரசன் அவர்கள் சூர தேங்காய் உடைத்து வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் சரக காவல் துனணத் தலைவர் எம். சத்யபிரியா காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் எம் .சுதாகர், இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் திருமதி வான்மதி ,இணை ஆணையர் முத்து ரத்தினவேலு, மற்றும் தியாகராஜன், வெள்ளைச்சாமி, ஆய்வாளர்கள் கிருத்திகா சுரேஷ் மாமன்ற உறுப்பினர்கள் கமலக்கண்ணன் பூங்கொடி தசரதன் அதிமுக மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான வாலாஜாபாத் பி.கணேசன். ஆகியோர் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்
காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 750 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மாவட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்புகள் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி சார்பாக இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் அருகே மண்டல மேலாளர் எ.ராஜாராமன் தலைமையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினார்கள் வழியெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருத்தேர் காந்தி சாலையில் உள்ள தேரடியில் இருந்து புறப்பட்டு மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து அதன் பின்பு காந்தி ரோட்டில் தேர் நிலையை அடைந்தது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் ஏழாம் நாளான இன்று திருத்தேரில் சாமி வீதி உலா வந்தபோது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக திருத்தேர் காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முன்னாள் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பி. கணேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் . ஒன்றிய செயலாளர் ஜீவா. பெரிய காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி கே யு எஸ் சோமசுந்தரம் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments