வேளாண்மை வளர்ச்சி திட்டம் சார்பாக விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 23-05-2022 அன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பெருநகர் ஊராட்சியை சார்ந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்று ,விதைகள், மருந்து தெளிப்பான், போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் விவசாய பெருங்குடி மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் க.செல்வம் உத்திரமேரூர் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றியக் குழு உறுப்பினருமான கெ.ஞானசேகரன் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் உத்திரமேரூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் வசந்தி குமார் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன் பேரூர் கழக செயலாளர் N.S.பாரிவள்ளல் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் DME அவர்களும் உத்திரமேரூர் ஒன்றிய குழு உறுப்பினரும் ஒன்றிய கழக துணைச் செயலாளருமான தயாளன் என்கின்ற ருத்திரக் கோட்டி அவர்களும் பெரு நகர் ஊராட்சி மன்றத் தலைவர் மங்கள கௌரி வடிவேலு அவர்களும் பெருநகர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி முருகன் அவர்களும் மற்றும் வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஒன்றிய ,பேரூர் , கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்கள் மற்றும் நலத்திட்ட பயனாளிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள்.
No comments
Thank you for your comments