காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
தமிழ் நாடு அரசு சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் மீனாட்சி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஒரகடம் ஸ்ரீ பெரும்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 8 தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தகுதி அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகான சான்றிதழ் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் 500 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி மன்ற தலைவர் பி. சசிகுமார் , உத்திரமேரூர் பேரூர் செயலாளர் என்.எஸ். பாரிவள்ளல் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி. குமார் செயற்குழு உறுப்பினர் இரா.நாகன். விவசாய அணி சோழனூர் ஏழுமலை. மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments