நியாயவிலை கடையை அமைச்சர் அன்பரசன் திடீர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் மாகரல் ஊராட்சியில் அமைந்துள்ள நியாயவிலை கடையை மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஊழியரிடம் மக்களுக்கு தரமான அரிசியை வழங்க வேண்டுமெனவும் தரமற்ற அரிசியை யாருக்கும் வழங்க வேண்டாமென அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா ஆர்த்தி இ.அ.ப.காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு க. செல்வம் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. சுந்தர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ. சிவ.ருத்ரய்யா உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கெ.ஞானசேகரன் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் பி.சசிகுமார் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments