வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி மிக விமர்சையாக நடைபெற்றது..
வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது
உலகப் பிரசித்தி பெற்ற 108 திவ்யதேசங்களில் முதன்மை தேசமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்தவாரம் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி கருடசேவை திருத்தேர் உற்சவம் பல்வேறு வாகனங்களில் வரதராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
9 வது நாளான இன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் அனந்தசரஸ் குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி உடன் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது மேலும் இந்த அனந்தசரஸ் குளத்தில் தான் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தரும் ஆதி அத்தி வரதர் சயன கோலத்தில் வீற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் பொதுமக்கள் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி ஒட்டி பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனையொட்டி சிறிய அளவிலான வரதராஜர் சிறப்பு பூஜை புனஸ்காரம் செய்யப்பட்டு நீரில் இறங்கினாள் இதனையடுத்து பொதுமக்களும் அடுத்தடுத்து நீராடி மகிழ்ந்தனர் இந்த தீர்த்தவாரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்
No comments
Thank you for your comments