Breaking News

புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!

சென்னை: 

புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!

சென்னை சாலை போக்குவரத்து ஆணையர் திரு.நடராஜன் IAS அவர்களின் உத்தரவின் படி இணை ஆணையர் சென்னை வடக்கு சரகம் ரவிசந்திரன் வழிகாட்டுதலின் படி, சென்னை கிழக்கு புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலர்  ஸ்ரீதர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் S.A ஞான வேல் மற்றும் குழுவினர் அவர்கள் மூன்று சக்கர வாகனம் ஆட்டோ ரிக்ஷாவை நிறுத்தி ஓட்டுனரிடம் சாலை விதிகளை கூறி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூன்று சக்கர வாகனத்தின் பின்புறம் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை  பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டி பொதுமக்கள்சாலை விதிகளை பற்றி தெரிந்து கொண்டதுடன் சாலை விபத்துகள் எதனால் வருவது என்று தெளிவாக புரிந்து கொண்டதாகவும் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர். 

இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துமாறு  வேண்டுகோள் விடுத்தனர். அதுமட்டுமின்றி கோரிக்கையாகவும் கூறினார்.

No comments

Thank you for your comments