Breaking News

14.05.2022 அன்று முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் (சுயதொழில் வேலைவாய்ப்பு) கருத்தரங்கு கூட்டம்

 காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் (சுயதொழில் வேலைவாய்ப்பு) கருத்தரங்கு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் 14.05.2022 அன்று முற்பகல் சனிக்கிழமை 11.00 மணிக்கு முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டமும், அதனை தொடர்ந்து முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் (சுய தொழில் வேலைவாய்ப்பு) கருத்தரங்கு கூட்டமும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

கருத்தரங்கம் நிகழ்ச்சியின் போது  முன்னாள் படைவீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கடன் உதவித்திட்டங்கள் மற்றும் மறு வேலைவாய்ப்பு பயிற்சிகள் குறித்து விளக்கவுரை நிகழ்த்தப்படவுள்ளது. அச்சமயம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

எனவே, முன்னாள் படைவீரர் சிறப்புக் குறை தீர்வு நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு நிகழ்ச்சியின் போது முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்த விதவையர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அவர்கள் தனது செய்திக்குறிப்பில்  தெரிவித்துள்ளார்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments