துரிதமான முறையில் செயல்பட்டு திருடனை கையும் களவுமாக பிடித்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் எஸ்பி
கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்காநல்லூர் பகுதியில் கடந்த 09.04.2022 அன்று இரவு பூட்டியிருந்த வீட்டில் சத்தம் வந்ததால் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சந்தேகம் அடைந்து அவ்வீட்டின் அருகே சென்று பார்த்தபோது, அவ்வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டினுள்ளே திருட முயன்ற பொள்ளாச்சி ராமபட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது யாசின்(31) மற்றும் சலிம்(19) ஆகிய இரண்டு நபர்களை காவல்துறையினர் துரிதமான முறையில் செயல்பட்டு கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட ஆனைமலை காவல் நிலைய தலைமை காவலர்கள் HC 1853 சத்துருகன், HC 714 கர்ணன் மற்றும் மு.நி.காவலர் 416 கிருஷ்ண சந்தர் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
No comments
Thank you for your comments