Breaking News

எஸ்கேஎம் நிறுவனங்களின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா

ஈரோடு, ஏப்.12- 

எஸ்கேஎம் ஸ்ரீ குரூப் குழும நிறுவனங்களின் குடும்பத் திருவிழா மற்றும் எஸ்கேஎம் முட்டைப் பவுடர் நிறுவனத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. 

ஈரோடு மாவட்டம், சோளங்காபாளையத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும் எஸ்கேஎம் முட்டைப்பவுடர் தயாரிக்கும் நிறுவனத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தை  தமது நிறுவன பணியாளர்களின் குடும்ப விழாவாக கொண்டாடியது.




இவ்விழாவில் எஸ்கேஎம் குழும நிறுவனங்களின் தலைவர் பத்மஸ்ரீ  மயிலானந்தன், எஸ்கேஎம் முட்டைப்பவுடர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்கேஎம் ஸ்ரீசிவ்குமார் அவர்களின் தலைமையில், சித்தா ஆயுர்வேதா நிறுவனத்தின் இணை இயக்குநர் சிவ்குமார் குமுதவள்ளி அவர்கள் மற்றும் எஸ்கேஎம் இயக்குநர் எஸ் கே சரத்ராம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.  நிறுவனங்களின் 2000த்திற்கும்  மேற்பட்ட தமது பணியாளர்களுடன் மிகச்சிறப்பான முறையில் விழாவினை கொண்டாட்டம் நடைபெற்றது. 

இவ்விழாவில் எஸ்கேஎம் தூண்கள்,  எஸ்கேஎம் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் சிறந்த மார்கெட்டிங் அணிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

எஸ்கேஎம் முட்டைப்பவுடர், எஸ்கேஎம் பெஸ்ட் எக், ஹெர்போதயா, எஸ்கேஎம் சித்தா, ஆயுர்வேதா ஆகியவற்றின்   அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குகள் மற்றும் எதிர்கால வியாபார திட்டங்கள் போன்ற முக்கிய முடிவுகளை பற்றி நிர்வாக இயக்குநர் விளக்கினார்.

மேலும் எஸ்கேஎம் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களும், எஸ்கேஎம் பெஸ்ட் எக், ஹெர்போதயா, எஸ்கேஎம் சித்தா, ஆயுர்வேதா மருந்து விற்பனை பிரிவினர் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவானது கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவுப் பெற்றது.


No comments

Thank you for your comments