Breaking News

மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைப்பதற்கான கருத்தரங்கம்

 காஞ்சிபுரம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைப்பதற்கான ஒரு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைப்பதற்கான ஒரு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் இன்று (04,04,2022) காலை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மரு.P.பிரியா ராஜ் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மற்றும் மரு.ஏ.விஜய்குமார், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் (குடும்ப நலம்) அவர்களின் முன்னிலையில் கருத்தரங்கம் துவக்கி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் மகப்பேறு இறப்பு விகிதம் என்பதை 85.5/1,00,000 உயிருடன் பிறந்த குழந்தைகள்  மற்றும் சிசு இறப்பு விகிதம் 8.0/1,000 உயிருடன் பிறந்த குழந்தைகள் உள்ளது. இதனைக் குறைப்பதற்காக இந்த ஒரு நாள் கருத்தரங்கின் நோக்கம் ஆகும். 

இதில் தேசிய சுகாதார குழும மகப்பேறு மருத்துவர் மரு.ளு,ரத்தினகுமார் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் மரு.சத்யா மற்றும் மரு.து,குமுதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

No comments

Thank you for your comments