எனது மாமியார் வீடுடான தமிழக மக்களுக்கு நன்றி... நடிகை ரோஜா நெகிழ்ச்சி
காஞ்சிபுரம் :
எனது தாய் வீடான ஆந்திரா மக்களுக்கும், எனது மாமியார் வீடுடான தமிழக மக்களும் நான் அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி என காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் ஆந்திரா மாநில சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உலக பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் ஆந்திரா மாநில சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்,
ஆந்திர மாநிலத்தில் அமைச்சரவையில் இடம் கிடைத்ததற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தாய் வீடான ஆந்திராவில் எனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க பிராத்தனை செய்தார்கள், அதே போல் தமிழ்நாடு எனக்கு மாமியார் வீடு இங்கேயும் எனக்காக அனைவரும் பிரார்த்தனை செய்தார்கள்,அதற்காக அனைவருக்கும் நன்றி..
நான் முதல் படம் நடித்தது முதல் தற்பொழுது வரை ஆண்டுதோறும் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்வேன்... என்னோட வேண்டுதலை அம்பாள் நிறைவேற்றியுள்ளார்... அதற்கு பிரார்த்தனையாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்ய உள்ளேன்..
எந்த ஒரு காரியம் செய்தாலும் காஞ்சி காமாட்சி அம்மனை வணங்கிய பின்தான் நான் தொடங்குவேன்.
எனது தாய் வீடான ஆந்திரா மக்களுக்கும், எனது மாமியார் வீடுடான தமிழக மக்களும் நான் அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.

No comments
Thank you for your comments