கோவை வழியாக மும்பை-திருவனந்தபுரம் இடையே ரயில் இயக்கம்
கோவை, ஏப்.19-
கோவை வழியாக மும்பை-திருவனந்தபுரம் இடையே ரயில் வருகிற 23-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது
சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவனந்தபுரம்- மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்(எண்:16332) வரும் 23-ந் தேதி முதல் சனிக்கிழமைகளில் திருவனந்தபுரத்தில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7.15 மணிக்கு மும்பை சென்றடையும்.
இதேபோல் மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம்-திருவனந்தபுரம் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்(எண்:16331) வருகிற 24-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பையில் இருந்து இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இந்த ரயில் எர்ணாகுளம், ஆலுவா, திருச்சசூர், ஓட்டபாலம், பாலக்காடு, போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments