Breaking News

சாஸ்திரி நகரில் முழுநேர ரேஷன் கடை கேட்டு பொதுமக்கள் மனு

 வேலூர் :

வேலூர் சாஸ்திரி நகரில் முழுநேர ரேஷன் கடை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.

வேலூர் கூட்டுறவு துறை துணை பதிவாளர் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர் பி.எஸ்.பழனி  மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். 

அதில் கூறியிருப்பதாவது,  வேலூர் சாஸ்திரி நகரில் பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதில் 700-க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ளனர். செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மட்டுமே ரேஷன் கடை திறக்கப்படுகிறது. 

இதனால் 2 நாட்களிலும் பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிகின்றனர். நீண்ட வரிசையில் அவர்கள் அதிக நேரம் காத்திருந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. 

பலர் கூலித் தொழிலாளர்களாக இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் வந்து பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பகுதி நேரமாக செயல்படும் இந்த கடையை அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் முழு நேர ரேஷன் கடையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

No comments

Thank you for your comments