பாஜகவின் 40வது ஸ்தாபன தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் கொடியேற்றி கொண்டாட்டம்...
காஞ்சிபுரம்:
பாஜகவின் 40வது ஸ்தாபன தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சி சாலைத்தெரு 2-வது வார்டு கட்சி அலுவலகத்தில் இன்று காலை 7-00 மணியளவில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேற்கு பாஜக பொது செயலாளர் காஞ்சி.ஜீவானந்தம் முன்னிலையில் வட்ட தலைவர் ஆர்.யுவராஜ்(எ) சரவணன் அவர்களால் பாஜக கொடியேற்றி இனிப்பு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஐ.டி.ஸ்ரீதர், வழக்கறிஞர் நாகராஜ், கிளை தலைவர்கள் ரைஸ்மில் ஏ.சீனுவாசன், கே.ஜி.டி.ஜெய்சங்கர், பால்.எஸ்.சீனுவாசன் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் சந்தானம், நடராஜ், இரமேஷ், மணிகண்டன், சுரேஷ், வினோத் உட்பட பொதுமக்கள் பலரும் பங்கேற்கேற்று விழா விமர்சையாக நடைப்பெற்றது..
No comments
Thank you for your comments