Breaking News

திருவள்ளூரில் தொழில்பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை:

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருவள்ளூர் தொகுதி திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராசபுரம் கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த பகுதி விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் இல்லாத பகுதி என்பதால், இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிப்காட் தொழில்நுட்ப பூங்கா அமைக்க போதிய நிலம், குடியிருப்பு வசதிளுக்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கும்மிடிப்பூண்டி, மப்பேடு ஆகிய பகுதிகளில் ஏற்கனவே தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும், தேர்தல் வாக்குறுதி மற்றும் 2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததை போல், திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments