ராமநாதபுரத்தில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், ஏப்.18-
ராமநாதபுரத்தில் புதிய தமிழகம் சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை சொத்து வரி உயர்வை கண்டித்து அரண்மனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி உத்தரவின்படி தமிழகம் முழுவதும் கடும் விலைவாசி உயர்வைக் கண்டித்து புதிய தமிழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி ராமநாதபுரம் அரண்மனையில் புதிய தமிழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பாலுசாமி தலைமை வகித்தார். நகர் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார் மாநில துணைச் செயலாளர் கதிரேசன் மாநில தொண்டரணி கண்டதேவி பாலா, மாவட்ட இணைச்செயலாளர் மலைச் செல்வம் மாவட்ட துணைச் செயலாளர் முத்துசாமி, முனியசாமி, அற்புதராஜ், ஒன்றிய செயலாளர்கள் முருகவேல் சேகர் ராஜா ஜெயச்சந்திரன் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வர வேண்டும் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

No comments
Thank you for your comments