நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு...
காஞ்சிபுரம்:
சுங்குவார்சத்திரம் அருகே நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு இடத்தை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு பின்பு நிறுத்தியது ஏன் என்றும்... உடனே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் ஊராட்சி உள்ளது இங்கு சுங்குவார்சத்திரம் நீர்நிலை ஆக்கிரமிப்பு குலம் புறம்போக்கு இடத்தில் வீடுகள் மற்றும் கடைகள் இடிப்பதற்கு கடந்த 24ம் தேதியில் எங்கள் ஊராட்சி மன்ற தலைவர் 5 ஜேசிபி வாகனங்களை தயார் செய்தும் வட்டாட்சியர் அவர்கள் மின்சார வாரியத்திற்கு கடிதம் கொடுத்து மின் இணைப்பு துண்டிக்க ஏற்பாடு செய்தும் அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஐந்து நாட்களுக்கு இடிப்பதை நிறுத்த சொல்லி உத்தரவிட்டுள்ளதாக கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர் இதனால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
கிராம ஊராட்சியில் ஏகமனதாக தீர்மானம் போட்டு நீர்நிலை புறம்போக்கு அகற்றச் சொல்லி வருவாய் துறையினரிடம் தீர்மான நகல் ஒப்படைத்துள்ளார். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனடியாக நீர்நிலை புறம்போக்கு இடத்தை அகற்ற மறுஉத்தரவு அளிக்குமாறு இன்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
No comments
Thank you for your comments