முதலமைச்சருடன் விவசாயிகள் கலந்துரையாடல் காணொலிகாட்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்பு
ராமநாதபுரம், ஏப்.18-
ராமநாதபுரத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் முதலமைச்சருடன் விவசாயிகள் கலந்துரையாடல்.. காணொலிகாட்சி அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ஓர் ஆண்டில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் பெற்று பயனடைந்த விவசாயப் பெருமக்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் விழாவின் காணொலி காட்சி வாயிலாக இராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மின் விபத்தினால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சத்திற்கான நிவாரணத்தொகை இணை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேற்பார்வை பொறியாளர் பிரிடா பத்மினி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம் துணைத் தலைவர் பிரவீன் தங்கம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments
Thank you for your comments