Breaking News

மாணவர்களை கண்டு அலறும் ஆசிரியர்கள்... சீரழியும் சமுதாயம்.... காரணம் என்ன?

சென்னை, ஏப்.1-

 தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக, மாணவர்கள் வன்முறையை கையில் எடுக்கும் சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி, அலைகளை உருவாக்கியுள்ளது. பணி பாதுகாப்பு வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக, பள்ளிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இது நிரந்தர தீர்வாக அமையாது என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக, மாணவர்கள் வன்முறையை கையில் எடுக்கும் சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி, அலைகளை உருவாக்கி யுள்ளது.  குறிப்பாக, ஆசிரியர்&மாணவர் உறவில் ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியை நிரப்புவதற்கு, அறிவியல் பூர்வமாக தீர்வை நடைமுறைப்படுத்த, பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும். வெறும் பாடத்திட்டத்தை முடிப்பதிலும், கல்வித்துறை தரும் பாடத்திட்டத்தை சாராத பணிகளில் ஈடுபடுவதும் மட்டுமே, ஆசிரியர்களின் கடமையாக தொடர்கிறது.

மாணவர்களை உளவியல் ரீதியாக எப்படி வழிநடத்த வேண்டுமென்ற ஆலோசனை, ஆசிரியர்களுக்கு தேவைப்படுகிறது. இதேபோல், நன்னெறி வகுப்புகள், நீதிபோதனைகள் மூலம், அறம் சார்ந்த வாழ்வியல் குறித்து, அறிந்து கொள்ளும் வாய்ப்பை, மாணவர்களுக்கு உருவாக்க வேண்டியது, கட்டாயம் என்பது பலரது கருத்தாக உள்ளது.

மனநல மருத்துவர்கள் கூறுகையில், ''பாடத்திட்டத்தில் மனநலனிற்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. உளவியல் ஆலோசனை மாணவர்களை போல ஆசிரியர்களுக்கும் தேவைப்படுகிறது.  குறிப்பிட்ட இடைவெளியில், இதை வழங்குவது கல்வித்துறையின் பொறுப்பு. கண்டிப்பு மிகுந்தாலும், குறைந்தாலும் ஆரோக்கியமான தலைமுறை உருவாவது கேள்விக்குறியே.

நன்னெறி வகுப்புகள் இல்லாததால், தான் செய்வது தவறு என்பதை உணருவதற்கு கூட, சிறார்கள் தயாராக இருப்பதில்லை. உடல், மன ஆரோக்கியம் மேம்படுத்தாமல், கல்வி மட்டும் அளிப்பதால் பலனில்லை. உளவியல் ஆலோசனை வழங்காததும், வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணம். ஆசிரியர்&மாணவர் உறவை வலுப்படுத்த, கல்வித்துறை சில ஆக்கப்பூர்வ மாற்றங்களை கொண்டுவர வேண்டியது அவசியம்,'' என்றார். 

குறிப்பாக பள்ளி மாணவர்களும் சரி, கல்லூரி மாணவர்களும் சரி நாகரீகம் என்கின்ற பெயரில் தவறான பாதையில் செயல்படுகின்றனர். மாணவர்களுக்கிடையேயும் சண்டைகள் வன்முறை தாக்குதல்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. 

இதற்கு முக்கிய காரணம் போதிய வழிகாட்டு முறைகள் இல்லாதது. அந்த காலத்தில் தாத்தா பாட்டிகள் கதை கூறி நல்வழிபடுத்தினார்கள். ஆனால் இன்றைய அவசர உலகத்தில் பெற்றோர்கள் பணத்தை நோக்கி மட்டுமே பயணிக்கின்றனர். இதனால் பிள்ளைகளின் வளர்ப்பில் போதிய கவனம் செலுத்தாது முக்கிய காரணம்... ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்க கூடாது திட்டக்கூடாது என்றெல்லாம் வசனம் பேசி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீது மரியாதை அற்&று போணது... தவறு செய்தால் தண்டிப்பார்கள் என்ற பயம் நீங்கியது.. இதுவும் இன்றை மாணவ சமூதாயம் சீரழிவுக்கு காரணமாக உள்ளது... மாணவர்கள் தவறு செய்தாலும் கேட்க வேண்டிய ஆசிரியர்கள் கேட்பதற்கு பயப்படும் சூழல் உருவாகி உள்ளது. 

இன்றைய இளைஞர்களில் பலர் சுயநலத்தை மாத்திரம் கருத்திற் கொண்டு நாட்டின் எதிர்காலத்தை புறந்தள்ளி விடுகிறார்கள். தொழில்நுட்ப சாதனங்களுடன் பின்னிப்பிணைந்து நவநாகரிகம் என்ற போர்வையில் தமது எதிர்காலத்தையும் இயற்கையையும் சீரழிக்கும் விஷயங்களில் ஈடுபடுகிறார்கள்.

போதை ஒரு மருந்துமல்ல, ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு உணவும் அல்ல. அதை அருந்துவதால் இளைஞர்களுக்கும், அவன் வாழும் சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் ஏற்படும் தீங்குகள் எண்ணிலடங்காதவை. போதைவஸ்துக்கு அடிமையாகும் இளைஞர்கள் தமது வாழ்க்கையையே அழித்துக் கொள்கிறார்கள். இன்றோ பள்ளி மாணவர்களும் இதற்கு அடிமையாகின்றனர்... என்பது மிகவும் வேதனையாக உள்ளது...

அடுத்த கட்டமாக விஞ்ஞான வளர்ச்சியில் உள்ளடங்குகின்ற தொலைத்தொடர்பு சாதனங்களில் ஒன்றுதான் கையடக்கத் தொலைபேசி ஆகும்.இளவட்டத்தினரின் தவறான பாவனைகளால் அனைவருக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதோடு வதந்திகள் பரவுவதற்கும் இவை காரணங்களாக அமைகின்றன.


பிரதானமாக இணையத்தைக் குறிப்பிடலாம். இவ்வாறு கையடக்கத் தொலைபேசியில் புதிய தொழில்நுட்பங்கள் உட்செலுத்தப்பட்டிருந்தாலும் கூட அதனை இளைஞர்கள் சரியான பாதையில் பயன்படுத்துவதிலும் பார்க்க பிழையான பாதையில் பயன்படுத்துவது அதிகம். சமூக விழுமியத்தைப் பேண வேண்டிய சமூக இணையத்தளங்கள் பொறுப்பற்று வீண் வேடிக்கையிலும் விபரீதங்களிலுமே இட்டுச் செல்கின்றன. இணையத்தளத்தினூடாக ஆபாசப்படங்கள் போன்ற தீய விடயங்கள் இளைஞர்களின் மனதில் விதைக்கப்படுகின்றன.

இவ்வாறு பல்வேறு செயல்களினால் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை மண்ணோடு மண்ணாக்குகின்றனர். படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சுற்றித் திரிகின்றனர். படிக்க வேண்டிய பருவத்தையும் காலத்தையும் பாழாக்கிவிட்டு பின்னர் ஏங்குகின்றனர். பின்னர் பெற்றோரின் பணத்தை வீணான பாதையில் செலவிடுகின்றனர்.

இவ்வாறான பல முறையற்ற செயற்பாடுகளில் தற்கால இளைஞர்கள் பலர் மூழ்கியுள்ளனர்.

நல்ல குடிமக்களாகவும் நாட்டை வழிநடத்தும் நல்ல தலைவர்களாகவும் நாட்டின் நலனை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டிய இளைஞர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது மனதை உருக்கும் விஷயமாகும். இவ்வாறான இளைஞர்களை நல்ல வழியில் இட்டுச் செல்லும் பாரிய பொறுப்பு பெற்றோரையும் நாட்டு மக்களையும் பெரிதும் சார்ந்துள்ளது. 

இளைஞர்களை அழிக்கின்ற செயல்களில் இருந்து அவர்களை மீட்டெடுக்கவே அரசும் சமூகத் தொண்டு நிறுவனங்களும் ஊடகங்களும் பாடுபட்டு வருகின்றன. உலகளாவிய ரீதியிலும் கூட பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஆனால் மாணவர்களும், இளைஞர்கள் தமது திறமைகளை தாமே மழுங்கடிக்கின்றனர். ஒருவித பயம், கூச்சம் போன்றவற்றால் இளைஞர்கள் தமது திறமைகளை உலகுக்குக் காட்ட பின்வாங்குகின்றனர். ‘இலை மறை காய்களாக’ இருக்கும் இளைஞர்களின் திறமை எத்துறையாயினும் அத்துறை வெளிக்காட்டப்பட வேண்டும்.

கடந்த இரு மாதங்களில் மட்டும், தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் அரங்கேறிய வன்முறை சம்பவங்களின் பட்டியல் இதோ!

சம்பவம் 1: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது, மாணவர்கள் கேலி செய்து, எழுந்து நடனமாடியதாக வீடியோ வெளியானது.

சம்பவம் 2: கரூர் மாவட்டம், தோகைமலை, அரசு மேல்நிலைப்பள்ளியில், முடிவெட்டி வருமாறு கூறிய ஆசிரியரை, சினிமா பாணியில் ஊர்க்காரர்களை அழைத்து வந்து, மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் 3: இந்த சர்ச்சை அடங்கி முடிவதற்குள், தேனி மாவட்டம், ஆத்தூர் அருகே, மஞ்சினி அரசுப்பள்ளியில், தலைமையாசிரியரை மாணவர் ஒருவர் மிரட்டி, நாற்காலிகளை உடைத்தது போன்ற வீடியோ வெளியானது.

சம்பவம் 4: உச்சக்கட்டமாக, தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், 'ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலு' என ஆசிரியரையே மிரட்டுவது போன்ற வீடியோ வெளியானது.

No comments

Thank you for your comments