Breaking News

அறிவியல் பூங்கா பணிகள் 90 சதவீதம் நிறைவு

 ஈரோடு:

ஈரோடு அறிவியல் பூங்கா பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சூரம் பட்டியில் உள்ள ஸ்ரீகார்டன் பகுதியில் ரூ.10.42 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கடந்த வருடம் அறிவியல் பூங்கா பணி தொடங்கி நடந்து வந்தது. சுமார் 48 ஆயிரத்து 900 சதுரஅடியில் மிகப் பிரம்மாண்டமாக இந்த அறிவியல் பூங்கா தயாராகி வருகிறது. மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையிலும், தற்போது இருக்கும் புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் அறிவியல் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. 

இதில் மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான  வீடியோக்கள் காண் பிக்கப்பட உள்ளது. மேலும் மாதிரி ராக்கெட் தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராக்கெட் பற்றிய தகவல்கள் அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான அனைத்து வீடியோக்கள் மாணவர்களுக்கு போட்டு காண்பிக்கப்பட உள்ளது. 

இங்கு அறிவியல் தொடர்பான கண்காட்சியும் மாணவர் பார்வைக்கு வைக்கப்படும். முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட அறைகள் உள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 40 மாண வர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.  விண்வெளியில் நடக்கும் நிகழ்வுகள் அப்படியே நம் கண்முன் நிறுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தற்போது இதன் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து பணிகளும் முடிந்து மாணவ மாணவிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments