Breaking News

5000 ஆண்டுகளுக்கு முன்பே வானிலை மற்றும் வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட நடவாவி கிணறு...

காஞ்சிபுரம்:

5000 ஆண்டுகளுக்கு முன்பே வானிலை மற்றும் வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்டு இன்றளவிலும் கட்டடக் கலைக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறது நடவாவி கிணறு.

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயில். ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் காலமான 1584 இக்கோயில் கட்ட துவங்கி 1612 ல் கட்டி முடிக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.

ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும் வழியில் சிறிய துண்டு இப்பகுதியில் விழுந்து சஞ்சீவி மூலிகைகள் நிறைந்த காடாக இருந்த நிலையில் சுயம்புவாக ஆஞ்சநேயர் உருவானதாக வரலாறு கூறுகிறது.

கிருஷ்ணதேவராயர் காலத்தில் அவரது அமைச்சரவையில் இருந்த லட்சுமி குமார தாத்தாச்சாரியார் இக்கிராமத்தில் தங்கியிருந்தபோது இவரிடம் இருந்த நகை திருடு போனதாக திருடிய நபரின் கண் பார்வை சற்று நேரத்தில் பரி போனதைக் கண்டு திருடன் மீண்டும் இவரிடம் ஒப்படைத்து இங்குள்ள ஆஞ்சநேயரிடம் வேண்டுதலின் பேரில் கண் கிடைக்க பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் தாங்கள் இழந்த பொருட்களை மீட்கவும் வாழ்வில் வளம் பெறுவவும் சஞ்சீவிராயரை வழிபடுவது ஐதீகமாக உள்ளது.

இக்கோயிலை ஒட்டி 133 ஏக்கர் பரப்பளவில் பெரிய சமுத்திரம் உள்ளது. இத்திருக்கோயிலில் உள்பிரகாரத்தில் முதல் நடவாவி கிணறு அமைக்க முயற்சித்தபோது பயணிக்கவில்லை அதனைத்தொடர்ந்து குளக்கரை ஓரம் இரண்டாவதாக கிணறு அமைக்க முயற்சித்துள்ளனர்.

இந்த இரண்டு முயற்சியிலும் தோல்வி அடைந்ததால் இது குறித்து ஆராய்ந்த ஜோதிடர்கள் இப்பகுதியில் இதற்கான வாஸ்து அமைப்புகள் இல்லை எனக்கூறி இக்கிராம எல்லையை ஒட்டியுள்ள பகுதியை தேர்வு செய்துள்ளனர்.

அதன்படி உருவாக்கப்பட்டதே நடவாவி கிணறு. இக்கிணறு ஜோதிட சாஸ்திரப்படி 12 ராசிகள் 12 தூண்களும் , கிணற்றுக்குள் இறங்க இரண்டடுக்கு படிக்கட்டுகளும் என இருபத்தி ஏழு நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 படிக்கட்டுகளும் , நவகிரகங்களை வணங்கும் வகையில் ஒன்பது தூண்கள் இப்பகுதியை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது

இவை அனைத்தும் சேர்ந்து நாற்பத்தி எட்டு என மண்டலங்களை குறிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதன் உட்பிரகாரத்தில் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி என அழைக்கப்படும் வரதர் சித்ரா பௌர்ணமி அன்று இந்த கிணற்று பகுதியில் எழுந்தருளி அனைத்து சிறப்பு பூஜைகளுக்கு பின் பாலாற்றுக்கு சென்று மீண்டும் வரதர் கோயிலுக்கு செல்வது வழக்கம்.

மனிதர் மட்டுமல்லாமல் கடவுளுக்கும் தோஷ நிவர்த்திக்காக இதுபோன்ற ஜோதிட சாஸ்திர முறையில் வருடத்திற்கு ஒரு முறை இக்கிணற்றை வலம் வந்து தோஷ நிவர்த்தி செய்துவிட்டு போவதாகவும் கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து மறுநாள் ராமபிரான் சீதாபிராட்டி லட்சுமணன் ஆகிய மூவரும் இத்திருக்குளத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கும் அருள்பாலிப்பது வழக்கம்.

இந்திரன் குளத்தின் வடிவமைப்பு மேலிருந்து பார்க்கும்போது சாவி போன்ற வடிவமைப்பைக் கொண்டது. இயற்கையான மழை பெய்யும் போதும் குளம் நிரம்பும் வகையில் வழித்தடங்களும்,  அப்பகுதியில் இவ்விழாவின் போது  குளத்தை சுத்தம் செய்தால் நீரூற்று தானாக பெருகி மீண்டும் திரும்பி விடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டாவதாக தோண்டப்பட்டு பாதியில் நின்றுபோன இதே வடிவமைப்பு கொண்ட குளத்தை சுற்றிலும் முட்புதர்கள் சுற்றி உள்ளதால் அதனை அகற்றி கட்டமைப்பினை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

5000 ஆண்டு கால கட்டிட வடிவமைப்பு அதன் வரலாறு என அனைத்தும் இன்றளவும் இப்பகுதிக்கு பெருமை சேர்த்து வருகிறது

No comments

Thank you for your comments