Breaking News

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (UDID) சிறப்பு முகாம்

காஞ்சிபுரம்:

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (UDID) விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைக்கு மாற்றாக மத்திய அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள UDID-Smart Card பெற்றிட உரிய ஆவணங்கள் பெறும் வகையில் கீழ்காணும் அட்டவணைப்படி, சிறப்பு முகாம்கள் அந்தந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம் வட்டத்தில் காஞ்சிபுரம், சிறுகாவேரிபாக்கம், திருப்புக்குழி, பரந்தூர், கோவிந்தவாடி, சிட்டியம்பாக்கம் ஆகிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் 29.3.2022 அன்று காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை, 

வாலாஜாபாத் வட்டத்தில் மாகரல், வாலாஜாபாத், தென்னேரி ஆகிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் 29.3.2022 அன்று காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை,

உத்திரமேரூர் வட்டத்தில் உத்திரமேரூர், திருப்புலிவனம், சாலவாக்கம், அரும்புலியுர், குண்ணவாக்கம், கலியாம்பூண்டி ஆகிய ஆய்வாளர் அலுவலகங்களில் 29.3.2022 அன்று காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை,

திருப்பெரும்புதூர் வட்டத்தில் திருப்பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், வல்லம், மதுரமங்கலம், தண்டலம் ஆகிய ஆய்வாளர் அலுவலகங்களில 30.3.2022 காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை,

குன்றத்தூர் வட்டத்தில் குன்றத்தூர், மாங்காடு, கொளப்பாக்கம், செரப்பணஞ்சேரி, படப்பை ஆகிய ஆய்வாளர் அலுவலகங்களில்  30.3.2022 காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை,

இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (UDID) பதிவு செய்திடாத மாற்றுத்திறனாளிகள் மேற்படி, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வாரியாக நடைபெறும் சிறப்பு முகாமில் 

1) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளின் அனைத்து பக்கங்கள் மற்றும் மருத்துவ சான்றுடன் 

2) ஆதார் அட்டை 

3) குடும்ப அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-2 

ஆகிய ஆவணங்களின் தெளிவான நகல்கள் மற்றும் தொலைபேசி எண் ஆகியவைகளுடன் மேற்படி முகாமில் ஆவணங்களை சமர்பித்து பயன்பெற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments