Breaking News

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி:

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


பிரதமர்  நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் 3% அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உயர்வு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.

7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைகள் அடிப்படையில் இந்த உயர்வு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.9,544.50 கோடி செலவாகும். இதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்  என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் வழங்கியுள்ளாதால்,  ஏற்கனவே 31 சதவீதம் பெறும் நிலையில், இனிமேல் 34 சதவீத அகவிலைப்படி பெறுவார்கள்.

No comments

Thank you for your comments