Breaking News

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்...

காஞ்சிபுரம்:

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு,  அவர்கள் மார்ச் 8ம் தேதி, மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும்  உத்தரவிட்டிருந்தார். 

இதன் ஒருபகுதியாக இன்று ( 14.03.22 )  காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் எம். சத்திய பிரியா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம்.சுதாகர் ஆகியோர் தலைமையில் அப்பல்லோ மருத்துவ குழுவினரின் மருத்துவ பரிசோதனை முகாம் சூர்யா திருமண மண்படத்தில் நடைபெற்றது. 

இந்த மருத்துவ பரிசோதனை முகாமில் பெண் காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 160 பேர் கலந்துகொண்டு மருத்துவபரிசோதனை செய்துகொண்டனர். 


இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காவல்துறை துணைத்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பெண் காவலர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

No comments

Thank you for your comments