Breaking News

உலக மகளிர் தினத்தையொட்டி மகளிர் காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உலக மகளிர் தினம் மற்றும்  ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் தனது அன்னதானத்தின் 300வது நாளை  முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள் .

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு என்ற மனிதநேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் சேவா ரத்னா திருமதி.செல்வாம்பிகை பாலாஜி அவர்களின் தலைமையில் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உலக மகளிர் தினம் மற்றும் 300வது நாள் அன்னதானத்தை முன்னிட்டு ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.T.லதா அவர்களின் முன்னிலையில் உதவி ஆய்வாளர் திருமதி.P.தீபிகா அவர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள் பிறகு மதிய உணவை சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வடை பாயசத்துடன் மதிய உணவை வழங்கினார்கள் அவர்களுடன் திருமதி. மகாலட்சுமி, திருமதி.தமிழரசி மற்றும் அனைத்து பெண் காவலர்களும் கலந்து கொண்டனர் அறக்கட்டளையின்  நிறுவன தலைவர் D.பாலாஜி சட்ட ஆலோசகர் S.K.நவாஸ் உடனிருந்தார்.

No comments

Thank you for your comments