உக்ரைனில் அடிக்கடி வெடிகுண்டு சத்தம்.. மாணவ-மாணவிகள் உருக்கமான பேட்டி
சென்னை:
உக்ரைனில் போர்சத்தம் தீபாவளி போல் இருந்தது என்றும், செல்லப் பிராணியை அழைத்து வருவது சிரமமாக இருந்தது என்று மாணவ-மாணவிகள் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
உக்ரைனில் இருந்து வந்த மாணவ-மாணவிகளின் உருக்கமான பேட்டி
உக்ரைனுக்கும் ரஷ்யா வுக்கும் போர் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த செல்வேந்திரன் சென்னையை சேர்ந்த சஞ்சனா மதுரையை சேர்ந்த சஜ்ஜூ குமார் & பங்கஜநாபன் மற்றும் கடலூரைச் சேர்ந்த மாசிலாமணி ஆகியோர் கார்கிவ் நகரில் இருந்து டெல்லி வந்து டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கயிருந்து சென்னை வந்தடைந்து அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் வந்தனர்.
பயணம் மற்றும் போர் அனுபவங்கள் குறித்து பேசிய சென்னையைச் சேர்ந்த மாணவி சஞ்சனா கூறுகையில்,
கார்கிவ் நகரில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறோம். போர் வெடிகுண்டு சத்தம் தீபாவளி போல் அடிக்கடி வெடித்து கொண்டிருந்தது.
பணம் இல்லாமல் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டோம் இந்திய அரசின் தூதரகம் மூலமாகவும் தமிழக அரசின் நடவடிக்கையாலும் தமிழகம் வந்தடைந்தோம். மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், செல்ல பிராணியை அழைத்து வருவது மிகவும் சிக்கலாகவும் சிரமமாகவும் இருந்தது எனவும் இந்தியாவில் மருத்துவபடிப்புக்கான நடைமுறை சரியில்லாததாலும் உக்ரைனில் குறைவான செலவில் மருத்துவம் படிக்க இயலும் என்பதால் தான் உக்ரைன் சென்றோம் என கூறினார்.
No comments
Thank you for your comments