மகளிர் மேம்பாட்டு திட்டம்.... தாட்கோவில் விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு
ஒருகிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர், இராணிபேட்டை, திருப்பத்தூர்) தாட்கோ மூலம் மகளிர் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், மற்றும் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம் மருத்துவமனை அமைத்தல் (மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், இரத்த பரிசோதனை நிலையம்) ஆகிய திட்டங்களின் கீழ் பயனடைய விரும்பும் ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்தவர்கள் சாதி சான்று, வருமான சான்று (ஆண்டு வருமானம் 2.00 இலட்சத்திற்குள்), குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம், விலைப்புள்ளி (GST - எண். உடன்) மற்றும் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் http://application.tahdco.com/ என்ற இணையத்தளத்தில் 31.03.2022 க்குள் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விபரங்களுக்கு
“மாவட்ட மேலாளர், தாட்கோ,
நெ.153/1, கோவிந்தராஜ் தெரு,
ஆதிதிராவிடர் மாணவர் விடுதி வளாகம்,
ஓட்டேரி, வேலூர் - 632 002.
(Cell : 9445029483)
தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Thank you for your comments