Breaking News

திமுக தலைமைக்கே மிரட்டல் விடுத்த பேரூராட்சி தலைவர் கணவர்... அரசியல் வட்டாராத்தில் பெரும் பரபரப்பு

பாப்பிரெட்டிப்பட்டி :

தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவரின் கணவர் தற்கொலை மிரட்டல் விடுத்தலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



திமுக கூட்டணியில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தி.மு.க.வினர் ஆதரவுடன் தி.மு.க. கட்சியின் 13வது வார்டு கவுன்சிலர் சாந்தி புஷ்பராஜ் ரகசிய வாக் கெடுப்பில் வெற்றி பெற்று பேரூராட்சி தலைவர் ஆனார்.

இதனால் அதிர்ச்சி யடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 4வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் சின்ன வேடிக்கு   தலைவர் பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதனால் தினமும்  பல்வேறு , போராட்டங்களையும் , நடத்தி வருகின்றனர்

இருந்தபோதிலும் தி.மு.க.வின் தலைமையின் உத்தரவை மீறி வெற்றி பெற்ற பேரூராட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என சாந்தி புஷ்பராஜ் விடாப்பிடியாக இருந்து வருகிறார்.

இருகட்சிகளின் தலைமைகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் பிரச்சினை  இன்று வரை தீர்ந்தபாடில்லை?    யார் தலைவர் என்பது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் தலைவர் பதவிக்கு போட்டி வேட் பாளராக நின்று தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர் சாந்தி புஷ்பராஜ் கணவர் புஷ்பராஜ்,  பொம்மிடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறிய தாவது:

விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பா.ம.க. கட்சியும், ரகசிய கூட்டணி வைத்து தலைவர் தேர்தலில் நின்று வெற்றி பெற முயற்சித்தனர். அதற்காகவே எனது மனைவி தி.மு.க. சார்பில் நின்று வெற்றி பெற்றார். தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம்.  கட்சியில் இருந்து  எங்களை நீக்கினாலும் பரவாயில்லை. கடந்த 40 ஆண்டு களாக கட்சியில் இருந்து வருகிறோம்.

தி.மு.க .தலைமை வற்புறுத் தினாலும் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம்.

தொடர்ந்து தலைமை தங்களை ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்தி அதிக நெருக்கடி ஏற்பட்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம். எங்களுக்கு வாக்களித்த கவுன்சிலர்கள் 7 பேரும் அவரவர் வீட்டில் தான் உள் ளனர். நாங்கள்  யாரையும் கடத்தவில்லை. வீண்பழி சுமத்த வேண்டாம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பா.ம.க.வினரும் ரகசிய கூட்டு வைத்த விவகாரம் தலைமைக்கு தெரியாது.எனவே நாங்கள்  பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம். நடப்பது நடக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது, தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் யார்? என்பது பொது மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் சமூக ஆர்வலர்களிடம் பெரும் விவாதமாக மாறி அரங்கேறி வருகிறது.

No comments

Thank you for your comments