பிரபஞ்சத்தின் காப்பியம் அவளென்பேன்.. மகளிர் தின வாழ்த்துக்கள்...
சுமந்தவளை வாழ்த்துவதற்கு
சுணக்கம் எதற்கு..?
பிணைந்தவளை
போற்றிட பிணக்கு எதற்கு..?
மடி நிறைப்பது ஆணாக இருந்தாலும்
அடி வயிறு நிறைப்பது பெண் தானே
மகப்பேறு என்பது மறுபிறவி தானே
உறவுகள் பலவானாலும்
உலகம் உருவாக்கும்
திருமதி பிறவி
இவள் தானே..
திரு ஆணின் மதி அவளெனவே
திருமதி ஆகிறாள் அவள்
வில் புருவம் கொண்டவள்
செல்வதால் செல்வி ஆகிறாள் அவள்
பாலின பேதம் இல்லை
சுமப்பது பாக்கியம் என்கிறாள் அவள்..
வாழ்க்கையின் வாக்கியம் அவளென்பேன்..
யாக்கை யின் கோப்பியம் அவளென்பேன்..
பிரபஞ்சத்தின் காப்பியம் அவளென்பேன்..
மகளிர் தின வாழ்த்துக்கள் அல்ல
மகளிருக்கான நன்றியுரை..!
இவண்
ஆற்காடு க.குமரன் ✍
No comments
Thank you for your comments