Breaking News

சென்னையில் நடைபெறும் பன்னாட்டுச் சதுரங்கப் போட்டி.!

சென்னை:

FIDE பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக இந்தியாவில், சென்னையில் நடைபெற உள்ளது தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து செஸ் ஒலிம்பியாட் போட்டியை ரஷ்யாவில் நடத்துவதில்லை என FIDE அறிவித்தது. 

இதையடுத்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்தப் பல நாடுகள் முயன்ற நிலையில் சதுரங்கப் போட்டியைச் சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால், தமிழக அரசு அதிகாரிகள், அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் இது கைகூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகளில் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், போட்டி சென்னையில் நடைபெறுவதால் இந்தியாவின் சார்பில் பல அணிகள் பங்கேற்கக் கூடிய வாய்ப்பு அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் உத்தேசமாக ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை சென்னையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments

Thank you for your comments