காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீர்செய்யும் பணி.. போக்குவரத்து வழிதடம் மாற்றம் அறிவிப்பு
வேலூர், மார்ச் 27:
காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீர்செய்யும் பணியால் 01.04.2022 முதல் போக்குவரத்து வழிதடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் இன்று (27-03-2022) அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் 01.04.2022 முதல் அனைத்து வாகனப் போக்குவரத்துகளையும் நிறுத்தி பாலம் பழுது பார்க்கும் பணியினை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் கீழ்கண்ட வழித்தடங்களில் இயக்க உத்தரவிடப்படுகிறது.
பொதுமக்களின் கவனத்திற்கு
1) வேலூரிலிருந்து சித்தூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் வேலூர் ஆடுதொட்டி பேருந்து நிலையத்திலிருந்து வி.ஐ.டி, EB கூட்டு ரோடு, சேர்காடு வழியாக செல்லலாம்.
2) சித்தூரிலிருந்து வேலூர் வரும் அனைத்து பேருந்துகளும் சேர்க்காடு, EB கூட்டு ரோடு, வி.ஐ.டி., வழியாக வேலூர் ஆடுதொட்டி பேருந்து நிலையம் வரை செல்லலாம்.
3) குடியாத்தத்திலிருந்து வேலூர் வரும் பேருந்துகள் இலத்தேரி, காட்பாடி கூட்டுரோடு, கிறிஸ்டியன் பேட்டை, டெல் வரை செல்லலாம்.
4) டெல் நிறுவனத்திலிருந்து குடியாத்தம் வரை செல்லும் பேருந்துகள் காட்பாடி கூட்டுரோடு, இலத்தேரி, குடியாத்தம் வரை செல்லலாம்.
5) குடியாத்தம் முதல் ஆற்காடு வரை செல்லும் பேருந்துகளில் பகுதி பேருந்துகள் இலத்தேரி பிரிவு வரையும் (Near Katpadi Junction) பகுதி பேருந்துகள் சித்தூர் பேருந்து நிலையம் முதல் வி.ஐ.டி, EB கூட்டு ரோடு, திருவலம், ஆற்காடு வரை செல்லலாம்.
6) வேலூரிலிருந்து அரக்கோணம் செல்லும் வாகனங்கள் வேலூர் பழைய பேருந்து நிலையம், வி.ஐ.டி, EB கூட்டு ரோடு, சேர்க்காடு, வள்ளிமலை, சோளிங்கர், திருத்தனி செல்லலாம்.
7) கிறிஸ்டியன் பேட்டையிலிருந்து சித்தூர் பேருந்து நிலையம் வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோரிக்ஷா, இலகுரக வாகனங்கள் (கார்), வள்ளிமலை கூட்டுரோடு, காமராஜபுரம், ரயில்வே நுழைவுப்பாலம், பழைய காட்பாடி வழியாக சித்தூர் பேருந்து நிலையம் செல்லலாம்.
8) கிறிஸ்டியன் பேட்டை, கரசமங்கலம், இலத்தேரியிலிருந்து வேலூர் செல்லும் கார், இலகுரக சரக்கு வாகனங்கள் (CAR, NCP, LGV) ஜாப்ராபேட்டை, கழிஞ்சூர், விருதம்பட்டு வழியாக செல்லலாம்.
9) தென் மாவட்டங்களிலிருந்து திருவண்ணாமலை வழியாக வரும் சரக்கு வாகனங்கள் போளுர், ஆரணி, ஆற்காடு, இராணிப்பேட்டை, சேர்காடு வழியாக சித்தூர் செல்லலாம்.
10) கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக வரும் சரக்கு வாகனங்கள் பள்ளிகொண்டா, குடியாத்தம் வழியாக சித்தூர் செல்லலாம்.
11) சித்தூரிலிருந்து தமிழ்நாடு வரும் வாகனங்கள் வேலூர் மாவட்ட அனுமதி பெற்ற சரக்கு வாகனங்கள் மட்டும் சேர்காடு வழியாக, EB கூட்டுரோடு, வி.ஐ.டி., வழியாக செல்லவும்.
12) தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் சேர்காடு, இராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை வழியாக செல்லவும்.
13) சித்தூரிலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் குடியாத்தம், பள்ளிகொண்டா வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments