Breaking News

பிறந்த மூன்று நாளான குழந்தையை திருடிய தம்பதியினரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

காஞ்சிபுரம்

பிறந்த மூன்று நாள் ஆன குழந்தை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் திருடிச் சென்ற தம்பதியினர் மடக்கிப் பிடித்தனர் பொதுமக்கள்... 


காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பிறந்து மூன்று நாட்கள் ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மகப்பேறு வளாகத்துக்குள் புகுந்து தம்பதியினர் திருடி சென்றுள்ளனர் .

ராணிப்பேட்டை மாவட்டம் மேல் பலந்தை கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் பிரபாகரன் சுஜாதா இவர்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு பிரிவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமு சத்தியா தம்பதியினர் அரசு மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார்கள்.

இதையடுத்து மகப்பேறு வளாகத்திற்குள் சென்ற தம்பதியினர் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை அங்கிருந்து கடத்தி மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேற முயன்றிருக்கிறார்கள்..

குழந்தையை காணவில்லை என பதறித் துடித்த பெற்றோர் சத்தம் போட்டுள்ளனர். குழந்தையை திருடிய தம்பதியினர் மருத்துவமனை வளாகத்தை விட்டு பேருந்து நிலையத்திற்கு செல்ல முற்படும் பொழுது மருத்துவமனை ஊழியர்கள் சந்தேகமடைந்த தம்பதியினரை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் குழந்தையை திருடி வந்தது தெரியவந்துள்ளது.

உடனடியாக விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் குழந்தையை திருடி சென்ற தம்பதியினரை விசாரணைக்காக விஷ்ணுகாந்தி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள் .


ராமு விசாரணையில் கூறியதாவது, சத்யா அரசு மருத்துவமனைக்கு முன்பே வந்து விட்டதாகவும் ராமு சத்யாவை தேடி அரசு மருத்துவமனைக்கு வரும் பொழுது சத்யா கையில் ஆண் குழந்தை ஒன்றை வைத்து இருப்பதை பார்த்ததாகவும் கூறுகிறார். 

சத்யாவுடன் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், மகப்பேறு வளாகத்தில் சிகிச்சைக்காக தான் வந்ததாகவும் அப்போது வயதான மூதாட்டி ஒருவர் இந்த ஆண் குழந்தையை தன்னிடம் கொடுத்ததாகவும் குழந்தையை வாங்கிக்கொண்டு உடனடியாக மருத்துவமனை வளாகத்தை விட்டு சென்று விட வேண்டும் என அந்த மூதாட்டி கூறியதாகவும் கூறியிருக்கிறார்.


இனி அடுத்த கட்ட விசாரணையில் தான் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் மருத்துவர்கள் உரிய கண்காணிப்பு இல்லாததே குழந்தையை எளிதாக திருடிச் சென்றது தெரியவந்துள்ளது என மருத்துவமனையில்  சிகிச்சை பெறும் பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள்.





No comments

Thank you for your comments