Breaking News

தூய்மைப் பணியாற்றும் பெண்களை கௌரவிப்பு

வாலாஜாபாத், மார்ச் 11: 

உலக மகளிர் தினத்தையொட்டி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் தூய்மைப் பணியாற்றும் பெண்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார் அமல்ராஜ் தலைமை தாங்கினார் இதில் சுந்தர் எம்எல்ஏ காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை கௌரவித்து இனிப்புகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர், பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல் துணை தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள், உலகநாதன் வேண்டாம் இரதம் திமுக ஒன்றிய செயலாளர் பூபாலன், பேரூர் செயலாளர் பாண்டியன் உட்பட வட்டார வளர்ச்சி அலுவலகம் அலுவலர்கள் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் மகளிர் சுய தொழில் சார்ந்த பெண்கள் பணித்தள பொறுப்பாளர் மற்றும் கிராமப்புற தூய்மைப் பணியாற்றும் பெண்கள் கலந்து  கொண்டனர். 

அனைத்து பெண்களுக்கும் இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது







No comments

Thank you for your comments