Breaking News

டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காஞ்சிபுரம் சரக காவல்துறை ஆய்வுக்கூட்டம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் சரக காவல்துறை ஆய்வுக்கூட்டம் தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் சரகத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்ட காவல்துறையின் ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு வை வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ் குமார், டிஐஜி சத்தியா ப்ரியா,

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் சுதாகர், அரவிந்த்,வருண் குமார், ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் நடைபெற்ற காஞ்சிபுரம் சரக காவல்துறை ஆய்வுக்கூட்டத் தில்  தமிழக காவல்துறை தலைவர் ( டிஜிபி) சைலேந்திரபாபு கலந்து கொண்டு காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களில் குற்றங்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அதனை மேம்படுத்துவது குறித்தும்,  பழைய குற்றங்களை கண்டு பிடிப்பதற்காக 3 மாவட்டங்களில் மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்தும், அதற்கான வழி காட்டு ஆலோசனைகளையும்,  சட்டம் ஒழுங்கினை பேணிக் காத்திட ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது முழு வீச்சில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைதீவிர படுத்த வேண்டும் என்றும்,  சாலை பயணம் பாதுகாப்பானதாக அமைந்திடவும் விபத்துகளை தடுத்திடவும், அதற்காக சாலை பாதுகாப்பினை மேம்படுத்த வேண்டும் என்றும்,

புலன் விசாரணைக்கான திறனை மேம்படுத்த காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும்,

இணையதள குற்றங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், சைபர் பிரிவின் காவலர்களுக்கு நிபுணத்துவத்தை மேம்படுத்தி கொடுக்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்தும்,

பொதுமக்கள் கொடுக்கும் புகாரின்மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களின் குறைகளை களைய எடுக்கப்பட்ட செயல்பாடுகள் குறித்தும்,

ஆயுதப்படை கவாத்துப்பணி முறையாக நடைபெறுவது குறித்தும், காவலர்களின் குறைகளை தீர்க்க மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்தும்,  பணியில் இருக்கும் காவலர்களின் நலன்களுக்காக எடுக்கப்பட்டு வரும் செயல்பாடுகள் மற்றும் அவர்களுக்கு உரிய முறையில் வாரந்தோறும் ஒரு நாள் விடுமுறை கிடைத்திடவும். மேலும் அவர்களது நலன்காக்க மேற்கொள்ளவிருக்கும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் காஞ்சிபுரம் சரகத்தில் போதைப்பொருள் கடத்தல், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்தல், மற்றும் சவாலான குற்ற வழக்குகளில் தீவிர முயற்சி எடுத்து கண்டுபிடித்தல் போன்ற பணிகளை அர்பணிப்பு உணர்வுடன் நற்செயலாற்றிய 10 குழுக்களைச் சார்ந்த சிறந்த காவலர்களுக்கு ரொக்க வெகுமதி அளித்து பாராட்டினார்.

ஆய்வுக் கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களைச் சார்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கள் காவல்துணை கண்காணிப்பாளர்கள், பயிற்சி உதவி கண்காணிப்பாளர் கள் தனிப்படை காவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments