Breaking News

கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் 14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே இறுதி செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு. மருத்துவ காப்பீடு ஓய்வுகால பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தின், ஒரு பகுதியாக காஞ்சிபுரம் பேருந்து நிலைய பணிமனை முன்பு வெள்ளியன்று  உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.  

போராட்டத்திற்கு  சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட கிருஷ்ணன் தலைமையில் சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துகுமார் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கிவைத்து பேசினார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.சங்கர், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு, சிஐடியு தென் சென்னை மாவட்டச் செயலாளர் பாலகிருஷணுக்கு, ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் இமயவர்மன், கைத்தறி மாவட்ட செயலாளர் வி.சிவப்பிரகாசம் ஆகியோர் உண்ணாவிரத்தை வாழ்த்தி பேசினார். இப்போரட்டத்தை (மார்ச்.05) சனியன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன நிர்வாகி ஏ.பி.அன்பழகன் பழசாரு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.











No comments

Thank you for your comments