கோவை இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் பணம் வசூல் செய்த மருத்துவப் பணியாளர்கள் மாற்றம்.
கோவை:
கோவை மாவட்டம் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நோயாளியிடம் கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்த மருத்துவ பணியாளர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ், உறவினரை சிகிச்சைக்காக கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அறுவை சிகிச்சை பிரிவிலிருந்து, வார்டுக்கு அழைத்துச் செல்ல மருத்துவ பணியாளர்கள், நோயாளியிடம் 500 ரூபாய் கேட்டுள்ளனர். 'என்னிடம் பணம் இல்லை; 100 ரூபாய் வாங்கி கொள்ளுங்கள்' என, கூறிய நோயாளியின் மனைவியிடம், 'ஆபரேஷன் தியேட்டரில் இருக்கும் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும். ஆகையால், 500 ரூபாய் தந்துதான் ஆக வேண்டும்' என கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, பக்கத்து படுக்கையிலிருந்த மற்றொரு நோயாளியிடம் பணம் கடனாக வாங்கி கொடுத்துள்ளார். இது தொடர்பாக, மருத்துவமனை டீன் ரவீந்திரனிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, ஒப்பந்த பணியாளர்கள் நான்கு பேரை பணியிலிருந்து நீக்கியும், 12 பேரை கோவை மருத்துவ கல்லுாரிக்கு பணியிட மாற்றம் செய்ய டீன் உத்தரவிட்டார்.
No comments
Thank you for your comments