Breaking News

பிவிசி பைப், புதிய மின்மோட்டார் வாங்க விவசாயிகளுக்கு மானிய உதவி

கோவை:

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ (TAHDCO) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு  பிவிசி பைப் வாங்க ரூ.15,000/- மானியமாகவும் மற்றும் புதிய மின்மோட்டார் வாங்க  ரூ.10,000/- மானியமாகவும் வழங்கப்படுகிறது.  

விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேணடும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். தாட்கோ மானியத் திட்டத்தில் பயன்பெறாத SC/ST  விவசாயிகளுக்கும், சிறு குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு மற்றும் துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 

மேலும் ஏற்கனவே தாட்கோ நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம் மற்றும் துரித மின் இணைப்பு திட்டம் ஆகிய திட்டங்களில் பயன்பெற்றிருந்தாலும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மேலும் PMKSY-SWMA  திட்டத்தில் மின்மோட்டார் மானியம் பெற்றவர்கள்,  வேளாண், தோட்டக்கலைத்துறை திட்டங்களில் மின் மோட்டார் மானியம் பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற வழிவகை இல்லை. 

விண்ணப்பதாரர் தங்களது சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, சிட்டா, பட்டா, அடங்கல், அ-பதிவேடு, புலப்பட வரைபடம், அங்கீகரிக்கப்ட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகியவற்றை தாட்கோ இணையதள முகவரியில் www.application.tahdco.com பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் விவரங்கள் அறிய மாவட்ட மேலாளர், தாட்கோ, டாக்டர்.பாலசுந்தரம் சாலை, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பின்புறம், கோயம்புத்தூர்  (தொலைபேசி எண்: 0422-2240111) ல் அணுகலாம்.  என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ இணையதளம் http://application.tahdco.com/


No comments

Thank you for your comments