Breaking News

ஏடிஎம்ல் இருந்த ரூ.20,000த்தை ஒப்படைத்த பெண்... எஸ்பி சுதாகர் பாராட்டு

 ATM ல் இருந்த 20,000 / - ரூபாயை காவல் கண்காணிப்பாளர்  முன்னிலையில் HDFC வங்கி மேலாளரிடம ஒப்படைத்த  S.பிரியாவுக்கு குவியும் பாராட்டுகள்...

S.பிரியா க/பெ.செல்வம், எண்.74, பல்லவன் நகர், TNHB பின்புறம், காஞ்சிபுரம் என்பவர் மேட்டுத்தெருவில் உள்ள ATM ல் பணம் எடுக்க 28.03.2022 அன்று  இரவு 9.25 மணிக்கு  சென்றபோது HDFC ATM ல்   ரூ.20.000 / - இருந்ததை கண்டார். 

அந்த பணத்தை  இன்று (30.03.2022) காலை காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களை சந்தித்து அவரிடம் பணத்தை ஒப்படைத்து அதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திரு.திவாகர் பழனி, கிளை மேலாளர், HDFC வங்கி, நெல்லுக்கார தெரு, காஞ்சிபுரம் அவரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, அவரிடம் பணத்தை திருமதி.S.பிரியாவின் மூலம் ஒப்படைத்து, உரியவரிடம் சேர்க்குமாறு கூறினார். 

அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாமல் செயல்பட்ட திருமதி.S.பிரியாவின் செயலை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்  வெகுவாகப் பாராட்டினார்.


No comments

Thank you for your comments