மக்கள் நல பணி திட்டங்களுக்கு ரூ.2.25 கோடி ஒதுக்கீடு - ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நல பணி திட்டங்களுக்கு 2 கோடி 25 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் தலைமையிலும் துணை தலைவர் நித்யா சுகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் ஊராட்சிகளின் தேவைகள் மற்றும் நிவர்த்தி செய்யக்கூடிய நோக்கங்களை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நல பணி திட்டங்களுக்கு 2 கோடி 25 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் தெரிவித்தார்.
பின்பு ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களிடம் அவர்களது கோரிக்கைகளையும் மக்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்து உடனடியாக அதற்கான தீர்வு கண்டு நடைமுறைக்கு செயல்படுத்துவதாகவும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் தெரிவித்தார்.
பின்பு பொதுப்பணித்துறை, மின்சார துறை, மக்கள் நல்வாழ்வு துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர்கள் (குன்றத்தூர்) சரஸ்வதி மனோகரன், (ஸ்ரீபெரும்புதூர்) எஸ்.டி.கருணாநிதி, (வாலாஜாபாத்) தேவேந்திரன், (காஞ்சிபுரம்) மலர்கொடி குமார், (உத்திரமேரூர்) ஹேமலதா ஞானசேகரன், மாவட்ட ஊராட்சி குழு பொறுப்பு செயலாளர் கோபி, மாவட்ட கவுன்சிலர்கள் பத்மா பாபு,ஹரி, பொற்கொடி செல்வராஜ், சிவசங்கர், அமுதா செல்வம், ராமூர்த்தி, பாலா, வனிதா மகேந்திரன், ராஜலட்சுமி மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments