தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை:
தமிழகத்தில் 17 காவல் துறை ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தென் மண்டல ஐஐியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் 17 காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தென் மண்டல ஐஐியாக அஸ்ரா கார்க், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக அன்பு, வடக்கு மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்னர்.
மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பிய ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க், தென் மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென் மண்டல ஐஜியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி அன்பு, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காவல் ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா, வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மண்டல ஐஜியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் குமார், நெல்லை மாநகர ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்ன வடக்கு சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி செந்தில்குமார், மதுரை மாநகரா காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை காவல் ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.டி.துரை குமார், அமலாக்கத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி மல்லிகா, காவல்துறை விரிவாக்கப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், காவல்துறை நலன்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை ஐஜி துரைக்குமார் பதவி உயர்வு பெற்று ரயில்வே காவல்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி பாலநாகதேவி, காவல்துறை செயலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி ஜெயராம், ஊர்க்காவல் படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஜி அபின் தினேஷ் மொடக் பதவி உயர்வு பெற்று பொருளாதார குற்றப்பரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஐஜி செந்தாமரைக் கண்ணன் பதவி உயர்வு பெற்று அதே துறையின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊர்க்காவல்படை ஐஜி வனிதா, பதவி உயர்வு பெற்று ரயில்வே காவல்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் குமார் பதவி உயர்வு பெற்று காவல்துறை நவீனமயமாக்கல் துறையின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசுப் பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் ஆயுஷ் மணீ திவாரி, மகேஷ்வா் தயாள், சுமித் சரண் ஆகியோர் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.
No comments
Thank you for your comments