சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து... 10 வயது சிறுவன் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு சாலைக்கு அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி போக்குவரத்து பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வேலூர் நோக்கி செல்லும் மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரி அதற்கு முன்பு மாங்காட்டில் இருந்து வேலூர் சென்று கொண்டிருந்த கார் மீது பலமாக மோதியதில் கார் இடது புறத்தில் இருந்து வலதுபுற சாலை நோக்கி பறந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வேலூரைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஜாய் செல்வா மற்றும் அவனது உறவினருமான ஓட்டுனருக்கும் காயம் ஏற்பட்டது.
லாரி ஓட்டுனர் விபத்தை கண்டதும் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார் அக்கம்பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் தகவல் பேரில் வந்த 108 வாகனம் மூலம் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்தினால் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிமீ தொலைவிற்கு போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்தனர்.
அரசு மருவத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரில் சிறுவன் ஜாய் செல்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஓட்டுநருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments