Breaking News

தொடர்ந்து குறைந்து வருகிறது மொத்த விலைக் குறியீடு சார்ந்த பணவீக்கம்...

2022 ஜனவரி மாதத்தில் பணவீக்க விகிதம் (தற்காலிகம்) 12.96 சதவீதமாக இருந்தது. 2021 நவம்பரில் 14 87% ஆக இருந்த பணவீக்க விகிதம் 2021 டிசம்பரில் 13.56% ஆக குறைந்த நிலையில் 2022 ஜனவரியில் 12.96% இருந்தது.

2022 ஜனவரியில் அதிக பணவீக்கத்தின் காரணியாக கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள் ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள் உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வு இருந்தது.

2022 ஜனவரிக்கான இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்கள் (தற்காலிகம்) மற்றும் 2021 நவம்பர் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு எண்கள் (இறுதி) ஆகியவற்றை தொழில் ஊக்குவிப்பு துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் இன்று வெளியிட்டது.

மொத்த விலை குறியீட்டு தற்காலிக எண்கள் ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி அன்று அல்லது அதற்கு அடுத்த பணி நாளன்று வெளியிடப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அமைப்பு ரீதியான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு இக்குறியீடு தற்காலிகமாக தயாரிக்கப்படுகிறது. பத்து வாரங்களுக்கு பிறகு குறியீடு இறுதி செய்யப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798220  

 

No comments

Thank you for your comments