Breaking News

10க்கும் மேற்பட்ட சிறுவர்களை கடித்து குதறிய வெறிநாய்...... பொதுமக்கள் மாநகராட்சி ஆணையரிடம் புகார்

காஞ்சிபுரம்:

கடந்த சில நாட்களாக தெருக்களில் வெறி நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. 10க்கும் மேற்பட்ட சிறுவர்களை கடித்து விட்டதாக ஹதர்பேட்டை தெரு (20 வது வார்டு) பொதுமக்கள் மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட ஹைதராபாத் தெருவில் கடந்த சில நாட்களாக  நாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றன.

மேலும் கடந்த ஒரு வார காலமாக தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் கடித்து விட்டதாக அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் பெருநகர மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் நாராயணன் அவர்களிடம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் நாய்களை பிடித்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர்.





குறிப்பாக கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் நாய்களை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments

Thank you for your comments