மத்திய பட்ஜெட் 2022-23 முக்கிய அறிவிப்பு...
புது டெல்லி:
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 48,000 கோடி ரூபாய் வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு, ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளன என்று மத்திய பட்ஜெட் 2022-23-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
அதில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்...
⦿ பிரதமரின் விரைவு சக்தித் திட்டம் ஏராளமான வேலைவாய்ப்புகளையும், தொழில் வாய்ப்புகளையும் இளைஞர்களுக்கு உருவாக்கும்.
⦿ நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கிமீ தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது.
⦿ விவசாயிகளுக்கும், தொழில் துறையினருக்கும் உதவி புரியும் வகையில், ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற போக்குவரத்துத் திட்டமானது குறிப்பிட்ட ஒரு பகுதியிலான உற்பத்திப் பொருளுக்கு ஊக்கமளிக்கும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.
⦿ குறு மற்றும் பெரிய பொருளாதாரத்துக்கு வழி வகுப்பது, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் & பொதுத்துறை முதலீடுகளில் கவனம் செலுத்துவதே #AmritMahotsav நோக்கம்
⦿ 1000 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் கரீப், ரபி பருவ விளைபொருட்கள் வரும் நிதியாண்டில் கொள்முதல் செய்யப்படும், இது ஒருகோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும்.
⦿ ட்ரோன் தொழில்நுட்பம், பயிர் வகைகளை மதிப்பீடு செய்யவும், நில ஆவணங்களை சரிபார்க்கவும், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை இறுதி செய்யவும் பயன்படுத்தப்படும்.
⦿ இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மாநில அரசுகள் மற்றம் சிறு-குறு- நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று அறிவிக்கப்படும்
⦿ பள்ளிகளில் கல்வி போதித்தலை மேம்படுத்துவதற்காக உயர்தர மின்னணு வழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும்.
⦿ இயற்கை விவசாயம் கங்கை வழித்தடத்தினை மேம்படுத்தும்.
⦿ இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
⦿ அடுத்த 3 ஆண்டுகளுக்குள்ளாக 400 வந்தே பாரத் ரயில்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இயக்கப்படும்
⦿ திறன் இந்தியா திட்டம் மேம்படுத்தப்பட்டு, அறிமுகப்படுத்தப்படும்
⦿ ட்ரோன் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவில் தொடங்கும் திட்டத்தின் கீழ் முன்னுரிமை
⦿ ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்புத் திட்டத்தின்கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 3.8 கோடி இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது
⦿ #PMGatiShakti கீழ் அடுத்த சில ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்.
⦿ பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 48,000 கோடி ரூபாய் வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்படவுள்ளன. இதன்மூலம் ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்ட உறுதுணை.
⦿ மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 திட்டங்கள் அறிமுகம்: சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம் மற்றும் ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை துவக்கம்
⦿ மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தொலைபேசி வழியாக ஆலோசனை வழங்கும் மன ஆரோக்கிய திட்டத்திற்கு அனுமதி.
⦿ நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மகளிர் மேம்பாடுதான் முக்கிய கோட்பாடாக அமையும்
⦿ #AtmaNirbharBharat இன் ஒரு பகுதியாக உலகத்தரம் வாய்ந்த உள்நாட்டு தொழில்நுட்பமான ’KAWACH’ இன் கீழ் 2000 கி. மீ தூரம் சாலை 2022 - 23 இல் கொண்டுவரப்படும்.
⦿ வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்துவதற்காக 1,500 கோடி ரூபாயில் திட்டங்கள்
⦿ புதிய திட்டத்தின்கீழ் 2 லட்சம் அங்கன்வாடிகளை மேம்படுத்த திட்டம்
⦿ 75 மாவட்டங்களில் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளின் கிளைகள் துவக்க திட்டம்
⦿ மின்னணு பாஸ்போர்ட் வரும் நிதியாண்டிலிருந்து வழங்கப்பட உள்ளது.
⦿ பாரம்பரிய மலைப்பகுதி சாலைகளுக்கான பர்வதமாலா திட்டம், தனியார் பொதுத்துறை கூட்டு முயற்சியின் கீழ் கொண்டுவரப்படும்
⦿ 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்படும்
⦿ நகர்ப்புற திட்டமிடலை மாற்றியமைக்க குழு அமைப்பு
⦿ மின்னணு வாயிலான பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு இணைப்பு வழங்க திட்டம்
⦿ சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத போக்குவரத்து திட்டம் அறிமுகம்
⦿ வாகனங்களுக்கான மின்கலன்களை மாற்றிக் கொள்ளும் வசதி மேற்கொள்ளப்படும்.
No comments
Thank you for your comments